மரியன்னையும் முதல் நூற்றாண்டு காட்சிகுறித்த ஓவியமும்

ஓவியம் அமைந்துள்ள இடம் : Catacombs of Priscilla (Rome, Italy)
ஓவியம் வரையபட்ட காலம் : கிபி_130க்குள்
ஆண்டவர் இயேசு மீட்பின் திட்டத்திற்காக தன் தாய் மரியன்னையை காட்சிகளாலும் அருட்கொடைகளாலும் ஏற்படுத்தி உலகின் கடைகோடி வரைக்கும் கொண்டு செல்கிறார்
அன்னையின் விண்ணேற்பிற்கு பின் இந்தகாட்சி நடந்தவைகளாக இருக்கலாம்
காட்சி குறித்து குறிப்பிட்டுள்ள வேதாகம வசனம் : எண் 24 : 15-17
[எண்ணாகமம் 24
15 பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
16 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது:
17 அவரைக்_காண்பேன், இப்பொழுது அல்ல: அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல: ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்]
ஓவியத்தில்,
இடப்புறம் : பிலேயாம் தீர்க்கதரிசி குழந்தை இயேசுவோடு அன்னையை காட்சியில் பார்த்த சித்திரம்
வலப்புறம் : மரியன்னை கையில் குழந்தையாக இயேசு கிறிஸ்து மற்றும் நட்சத்திரம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் காட்சிகளும் ஆண்டவர்இயேசுவால் மீட்பின் திட்டத்திற்காக உருவாக்கபட்ட புனித புண்ணிய பூமி
ஆப்ரிக்காவிலும் வேளாங்கண்ணி காட்சி நடைபெற்ற ஆண்டில் வேளாங்கண்ணி காட்சிபோன்று கையில் குழந்தைஇயேசுவோடு அன்னை காட்சி தந்துள்ளார்
ஆண்டவர் இயேசு குழந்தைவடிவில் அன்னையோடு காட்சி இடங்கள் உலகம் முழுவதும் உள்ளன
இயேசுவுக்கு புகழ் தாய் மரியே வாழ்க

Comments are closed.