புதிய வாழ்க்கைக்கான புளிக்காரமாக மாறுவோம்

0

திருத்தூதர்கள், திருஅவையின் புனித தந்தையர்கள், புனித பெனடிக்ட், போன்று  வல்லோபுரோசனின் புனித பெனடிக்ட் சபையின் முதல் தந்தையர்கள் துறவற வாழ்வின் அடிப்படையான செபத்தில் நிலைத்திருந்தனர் என்றும், ஒவ்வொருவரும் தனிப்பட்ட அளவில் தூய்மைபெற்று புதிய வாழ்க்கைக்கான புளிக்காரமாக மாறினார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூன் 28, சனிக்கிழமை வல்லோம்ப்ரோசனின் புனித பெனடிக்ட் சபை பொதுப்பேரவையில் பங்கேற்கும் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

புனித ஜான் குவல்பெர்தோ அவர்களின் அழைத்தல் வாழ்வானது நமது காலத்தின் சவால்களைக் கைவிடுவது பற்றிய கேள்வி அல்ல, மாறாக மாறிவரும் கலாச்சாரத்தில் அமைதியாக இருந்து கடவுளின் வார்த்தையைக் கேட்கத் தெரிந்தவர்களின் ஆழத்துடன் அவற்றை வாழ்வது, வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது பற்றிய கேள்வி என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

புனித ஜான் குவால்பெர்தோ நம்பகத்தன்மைக்கு அவரைத் தூண்டிய அழைப்புக்குக் கீழ்ப்படிந்தார் என்றும், ​பல்வேறு அச்சங்களுக்கு மத்தியில், முழு உலகமும் தன்னை மறுகட்டமைத்துக் கொள்வது போல் தோன்றும் விடியலில் மீண்டும் ஒருமுறை நாம் நம்மைக் காண்கிறோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

தொடக்கக் காலங்களில் நம்மிடம் இருந்த பலவீனமானது நிகழ்காலத்தின் பலவீனமான சூழலை ஊக்கப்படுத்தி ஆறுதல்படுத்த உதவுகின்றது என்றும், கடந்த காலத்தை விட நாம் பெரும்பாலும் வலிமை குன்றியவர்களாகவும், இளமை குன்றியவர்களாகவும், சில சமயங்களில் மனித வரம்புகள் மற்றும் தவறுகளால் காயமடைந்தவர்களாகவும் இருக்கிறோம் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

நாம் ஏற்றுக்கொண்ட நற்செய்தியானது விளக்கங்கள் தேவைப்படாத அதன் அழகின் நறுமணத்தைப் பரப்புவதை ஒருபோதும் நிறுத்தாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள்,  1973-ஆம் ஆண்டில், புனித ஆறாம் பவுல் VI வல்லோபுரோசனின் புனித பெனடிக்ட் சபையின் தொடக்கத்தை நினைவுகூர்ந்தார் என்று எடுத்துரைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.