கானாக் குடியரசின் அரசுத்தலைவருடனான சந்திப்பு

திருப்பீடம் மற்றும் கானாக் குடியரசு இரண்டிற்கும்  இடையிலான நல்லுறவைப் புதுப்பிக்கும் விதமாக அரசுத்தலைவர் திரு Nana Addo Akufo-Addo என்பவரை சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 22 சனிக்கிழமை வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் உள்ள ஓர் அறையில் மேற்கு ஆப்ரிக்காவின் கானாக் குடியரசின் அரசுத்தலைவர் திரு. Nana Addo Akufo-Addo வைச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை மற்றும் அரசுத்தலைவருடனான சுமூகமான உரையாடலின் போது திருப்பீடத்துடனான கானாக் குடியரசின் நல்லுறவு சிறப்பிக்கப்பட்டதுடன், நாட்டின் அரசியல் மற்றும் சமூக-பொருளாதார நிலைமையின் சில அம்சங்கள் பற்றியும்  குறிப்பாக கல்வி மற்றும் நலவாழ்வுத் துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் உரையாடலில் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் உலக அமைதி, பாதுகாப்பு பிரச்சனைகள், பன்னாட்டு நடப்பு விவகாரங்கள் குறித்த கருத்து பரிமாற்றமும் நடைபெற்றது.

திருத்தந்தையுடனான சந்திப்பிற்குப் பின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் பன்னாட்டு உறவுகள் அமைப்பின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் அரசுத்தலைவர் சந்தித்து உரையாடினார்.

Comments are closed.