கடவுள் மீது கொண்ட அன்பின் உண்மையான வெளிப்பாடு இயேசு

0

கடவுள் மீதும் மனிதன் மீதும் கொண்டுள்ள உண்மையான அன்பின் வெளிப்பாடாக இயேசு இருக்கின்றார் என்றும், அவரது அன்பு, தனக்கென்று வைத்திருக்காது பிறருக்குக் கொடுக்கும் அன்பு, மறுப்பு தெரிவிக்காது மன்னிக்கின்ற அன்பு, ஒருபோதும் கைவிடாது உதவுகின்ற அன்பு என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமையன்று காஸ்தல் கந்தோல்போ திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லத்தின் நுழைவாயில் அருகே இருந்து (Piazza della Libertà) லிபெர்த்தா வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ. 

“போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இயேசுவிடம் கேட்கும் திருச்சட்ட அறிஞரின் கேள்வியுடன் ஆரம்பமாகும் இன்றைய நற்செய்தி வாசகமானது, மீட்பிற்கான விருப்பம், தோல்வி, தீமை மற்றும் இறப்பு இல்லாத வாழ்க்கைக்கான அவரின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

நிலையாக பெறவேண்டிய ஒரு நன்மையினை மனித இதயம் எதிர்பார்க்கின்றது என்றும், அது வலுக்கட்டாயமாகப் பெறவேண்டியதோ, அடிமை போல கெஞ்சி பெற வேண்டியதோ, ஒப்பந்தம் வழியாகப் பெற வேண்டியதோ அல்ல. மாறாக, கடவுள் மட்டுமே கொடுக்கவல்ல, தந்தையிடமிருந்து மகன் வழியாக மனுக்குலத்திற்குக் கொடுக்கப்படும் நிலையான வாழ்வு என்றும் கூறினார் திருத்தந்தை.

Leave A Reply

Your email address will not be published.