மறு கன்னத்தை காட்டுங்கள்.. இயேசு அப்படி எதைத்தான் சொல்கிறார்

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை #எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை #வலக் கன்னத்தில் அறைபவருக்கு #மறுகன்னத்தையும் #திருப்பிக் காட்டுங்கள்.”
மத்தேயு நற்செய்தி 5:39

வன்முறையின் அல்லது ஒடுக்குமுறையின் போது இரண்டுவிதமான எதிர்வினையாற்றப்படும்
#fight or #flight
#நேருக்குநேர் போராடுவது…அல்லது #விலகி #ஓடுவது…
ஆனால் இயேசு இவ் இரண்டும் அல்லாமல் மூன்றாவது ஒன்றை இங்கு முன்வைக்கிறார்…அதுதான் மறு கன்னத்தை காட்ட சொல்கிறார்….
எவ்வாறு???

இயேசுவின் இவ் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக சம்பவம் ஒன்றை உதாரணமாக சொல்கிறேன்..

ஒருமுறை கல்கத்தா வீதியில் உள்ள ஒரு உணவகம் (bakery) ஒன்றிற்க்கு #பட்டிணியால் (starving) வாடிய குழந்தையோடு அன்னை தெரேச சென்று அக் குழந்தைக்கு பான் ஒன்றை கேட்டபோது #அக்கடை #உரிமையாளர் அன்னை தெரசா முகத்தில் #காறித்துப்பினார்..அப்போது அன்னை தெரேசா ## “எனக்குரியதை கொடுத்துவிட்டீர்கள், இந்த குழந்தைக்கு உரிய ரொட்டி அல்லது பான் ஏதோ ஒரு உணவைக்கொடுங்கள் என்றார்”
தன் தவறை உணர்ந்த உரிமையாளர் உணவு கொடுத்தான்…
சிறிய உதாரணம் மறு கன்னத்தை காட்டுவது என்பதற்கு
அன்னை தெரேசா #விலகி #போகவில்லை, #சண்டையிடவில்லை… தவறை உணர வைத்தார் மறு கன்னத்தை காட்டி..எவ்வாறு

நேருக்கு நேர் சண்டையிடுதல் என்பது இருவருக்கும் மோசமான விளைவை உண்டாக்கலாம்..விலகுவது எதிராளியை #மேலும் #பலமானவனாக காட்டி வன்முறையை மேலும் மேலும் தூண்டச்செய்யும்… இங்கு இயேசுவின் அனுகுமுறை மூன்றாவது வேறு வழியை காட்டுகிறது..

#இயேசுவின் #காலத்தில் #யூதர்களிடையே தங்கள் #இடது கையை பயன்படுத்துவது என்பது #பெரும்பாலான விடயங்களுக்கு #தீட்டாக (unclean) கருதப்பட்டது…அதனால் மற்றவரை #தாழந்தவன் #அடிமை #குறைந்தவன் என எதோ ஒருவிதத்தில் ஒருவரை #தாக்கும்போது அல்லது #தள்ளும்போது அவர்கள் வலதுகையின் பின் புறத்தால் தாக்கி தள்ளுவார்கள்..
இவ்வாறு செய்வது அன்று ஒரு #அவமதிப்புக்கான #அடிமைத்தனதுக்கான அடையாளம்…அதாவது அந்த தாக்கும் நபரின் வெளிப்பாடானது ‘நீ ஒரு அடிமை’,’நோயாளி’,’தாழ்ந்தவன்’ என்பதாக இருக்கும்..

#பாதிக்கப்படுவர் ஒன்றில் #எதிர்த்து #சண்டை #பிடிப்பார் அல்லது #விலகிப்போவார்…இயேசு எழுந்து மறு கன்னத்தை காட்ட சொல்கிறார்(never fight back nor flee)…மறு கன்னத்தை காட்டும்போது தாக்குபவரால் அதே உணர்வோடு மீண்டும் தீட்டாக கருதிய கரங்களால் தாக்க முடியாது அல்லது தள்ளமுடியாது..தீட்டான காரியத்தை செய்யும் சூழ்நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்..
((Turning the other (the left) cheek does two things, it forces him to not use the back of his hand, making him unable to strike with the same dismissive attitude and it shows your defiance to his violence in that you are not running away. You mirror his violence back to him as if to say, “I am not cowed.”))

இதன்மூலம் #பாதிக்கப்படுவர் #சொல்வது
‘நான் உம் இவ் அடிமைத்தனதுக்கு ஒத்துழைக்கவில்லை’ (not cooperate with you)..#அன்னை #தெரசா #செய்தது #போல
வன்முறையை ஒடுக்குமுறையை செய்யும் நபரை சிந்திக்கத்தூண்டும்…அவரின் இவ் தவறை கண்ணாடியாக (mirrors back the aggressor’s aggression) காட்டி சிந்திக்கத்தூண்டும்..பிழையை உணரத்தூன்டும்..

உங்களால் #மீண்டும் #என்னை இவ்வாறு #இழிவாக #நடத்தமுடியாது… நான் சண்டையிடவும் இல்லை ஓடவுமில்லை.அதேவேளை நான் அடிமையும் அல்ல.. நீர் வாழும் இவ்வாறான #உலக #நடத்தைக்கு நான் #ஒத்துழைக்கமாட்டேன்.
மறு கன்னத்தை காட்டுவதன் மூலம் இப் #பிழையை #செய்யும் #நபரை அவரின் #குற்றத்தை #எடுத்துக்காட்டுகிறோம்..புதிய ஒரு #பரிமாணத்தில் அவரின் #தவறை #உணரச்செய்து #சரியான வழிக்கு #கடவுளுக்குள்ளாக வர செய்கிறோம் இதன் மூலம்..
இதுதான் மறு கன்னத்தை காட்டுவது..

இயேசுவும் இதைத்தான் செய்தார் துன்புறுத்திய போது…திரும்ப சண்டையிடவில்லை ஓடவில்லை…
மறு கன்னத்தை காட்டினார்..
கடவுளின் அன்பும் இதே போலத்தான் நாம் பாவியாக இருந்தாலும்…

Comments are closed.