இயேசுகிறிஸ்து நாதரை நோக்கி மன்னிப்பு மன்றாட்டு.

மகா மதுரம் பொருந்திய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே, உம்முடைய பாடுகள் எனக்கு உறுதியும், ஆதரவுமாயிருப்பனவாக. இவற்றின் தெய்வீக சக்தியால் நான் உறுதிப்படுவேனாக. காப்பாற்றப்படுவேனாக. விரோதிகளிடமிருந்து பாதுகாக்கப்படுவேனாக. உம்முடைய காயங்கள் எனக்குப் போஜனமும், பானமுமாயிருப்பனவாக. இவற்றால் நான் போஷிக்கப்பட்டுத் திருப்தியடைந்து, இன்பம் அனுபவித்தேன். உமது திரு இரத்தத்தால் தெளிக்கப் பட்டு என் பாவங்கள் எல்லாவற்றிலும் இருந்து கழுவப் படுவேனாக. உமது மரணம் எனக்கு இடைவிடாத சீவனாயிருப்பதாக. உமது சிலுவை என் நித்திய மகிமையாக இருப்பதாக. இவற்றில் என் இருதயத்திற்கு உணவு, அக்களிப்பும், பாவ நோயின்மையும், இன்பமும் உண்டாதாக. நித்தியரும் சீவியருமாய், இராச்சிய பாரம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே.

Comments are closed.