இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

13.11.2023

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றைய ஞாயிறு திருப்பலி முதல் வாசகத்தில், “ஞானத்தைத் தேடுவோர், அதைக் கண்டடைவர்.” என சாலமோன் ஞானநூலில் கூறப்பட்டுள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் இறைவனின் திருவுளத்தை அறியத் தேவையான ஞானத்தை தூய ஆவியானவரிடம் வேண்டி பெற இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் முன்மதி கொண்ட தோழியரைப் போல நாமும் எதிர்நோக்குடன் விழிப்பாயிருந்து ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தமாயிருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

ஆன்மாக்களின் மாதத்தில் விஷேசமாக உத்தரிய நிலையில் அவதியுரும் அனைத்து ஆன்மாக்களுக்காகவும் திருப்பலியில் வேண்டுவோம். நமது ஆழமான இடைவிடாத வேண்டுதல்கள் ஆன்மாக்களை நித்திய பேரின்பத்திற்கு கொண்டு செல்ல இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

ஒளியின் திருநாளான இன்று, இயேசு ஒருவரே உலகின் ஒளி என்பதை உணரவும், அவர் வழியில் நாம் என்றும் நடந்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.