உக்ரைனில் அமைதி நிலவ கிறிஸ்தவர்கள் செபம்

திருப்பீட அவையும், WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் பல்சமய உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு அலுவலகமும் இணைந்து உரோம் நகரில், கடந்த வாரத்தில் இரண்டு நாள் ஆண்டுக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன.

மார்ச் 24, 25 கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களில் உரோம் நகரில் நடைபெற்ற கூட்டத்தில், பல்சமய உரையாடலை ஊக்குவிப்பதில், இவ்விரு அமைப்புக்களுக்கிடையே கடந்த 45 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணம் பற்றி திருப்தியாகப் பேசப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த இரண்டு நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், உலகில், குறிப்பாக, உக்ரைன் நாட்டில் அமைதி நிலவச் செபித்தனர், மற்றும், இந்த அமைப்புக்களின் ஐம்பதாவது ஆண்டு நிறைவுக்கு வருங்காலத் திட்டங்களையும் வகுத்தனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1977ம் ஆண்டிலிருந்து, PCID, மற்றும், WCC ஆகிய இரு அவைகளுக்கு இடையே இடம்பெறும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டங்கள், பல்வேறு முக்கியமான திட்டங்களை வழங்கியுள்ளன என்றும், பல்சமய இறைவேண்டல்(1994), பல்வேறு மதத்தவர்க்கிடையே திருமணம் பற்றிய சிந்தனை (1997), பன்முகத்தன்மை கொண்ட உலகில் கிறிஸ்தவ சாட்சியம் (2011) என, பல்வேறு முக்கிய தலைப்புக்களில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.