இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் குடும்ப பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக சிகிச்சையில் இருக்கும் ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள் ஆகியோர் பரிபூரண சுகம் பெற்றிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

மருத்துவ சேவைப் பணியின் நிமித்தம் நோய்த்தொற்றுக்குள்ளான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகிய அனைவரும் பரிபூரண சுகம் பெற்றிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

கொரோனா இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் பரிபூரண சுகம் பெற்றிட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

கடந்த சில நாள்களாக
கொரோனா பரவுதலின் இரண்டாவது அலை குறைந்து வருகிறது. நமது வேண்டுதல்களை செவிமடுத்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.