அன்னை மரியாவின் புகழ்மாலையில் மூன்று புதிய பெயர்கள் இணைப்பு

இரக்கம் நிறைந்த அன்னையே”, “நம்பிக்கையின் அன்னையே” “புலம்பெயர்ந்தோரின் ஆதரவே” ஆகிய மூன்று புகழ்ச்சிகள், லொரேத்தோ அன்னை மரியா மன்றாட்டு மாலையில் இணைக்கப்படுமாறு கூறப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அன்னை மரியாவின் மன்றாட்டு புகழ்மாலையில் (Litany of Loreto), அன்னை மரியா பற்றிய மேலும் மூன்று புகழ்ச்சிகளை இணைக்குமாறு, திருப்பீட இறை வழிபாட்டுமுறை பேராயம், ஜூன் 20, இச்சனிக்கிழமையன்று அனைத்து ஆயர் பேரவைகளின் தலைவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளது.

“இரக்கம்நிறை அன்னையே (Mater Misericordiae)”, “நம்பிக்கையின் அன்னையே (Mater Spei)” “புலம்பெயர்ந்தோரின் ஆதரவே (Solacium Migrantium)” ஆகிய மூன்று புகழ்ச்சிகள், லொரேத்தோ அன்னை மரியா மன்றாட்டு மாலையில் இணைக்கப்படுமாறு, அம்மடலில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.