திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயுற்றோரின் நலமாக விளங்கும் அன்னை மரியாவை நோக்கி எழுப்பியுள்ள செபம்:

ஓ, அன்னை மரியாவே, எங்கள் வாழ்வுப் பயணம் முழுவதிலும், மீட்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக நீர் ஒளிர்கின்றீர். சிலுவையடியில், இயேசுவின் துயரத்தில் பங்கேற்ற வேளையிலும், நம்பிக்கையைக் காத்த நோயுற்றோரின் நலமே, உம்மிடம் எங்களையே ஒப்படைக்கிறோம். மக்களின் பாதுகாவலே, கானா திருமணத்தில் தேவையறிந்து செயல்பட்ட நீர், எங்கள் தேவைகளையும் அறிவீர். எங்கள் துயரங்களும், போராட்டங்களும் நீங்கி, மகிழ்வும், கொண்டாட் டமும் வந்து சேருவனவாக. இறையன்பின் அன்னையே, தந்தையின் திருவுளத்தையும், இயேசுவின் சொற்களையும் கேட்டு நடக்க எங்களுக்கு உதவியருளும். சிலுவையின் வழியே, எங்கள் துன்பங்களையும், வேதனை களையும் தன் மீது சுமந்து, உயிர்ப்பின் மகிழ்வுக்கு எங்களை அழைத்துச் செல்பவர் இயேசுவே. உமது பாதுகாப்பை நம்பி வந்துள்ள எங்கள் வேண்டுதலை தள்ளிவிடாமல், எங்களை அனைத்து ஆபத்துக் களிலிருந்தும் காத்தருளும். ஆமென்

Comments are closed.