ஜூலை 5 : நற்செய்தி வாசகம்

பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில்

மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர்.

இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————-

பொதுக் காலத்தின் பதின்மூன்றாம் வாரம்

வெள்ளிக்கிழமை

I ஆமோஸ் 8: 4-6, 9-12

II மத்தேயு 9: 9-13

“என்னைப் பின்பற்றி வா”

தூய ஆவியாரின் அகராதியில் இல்லாத வார்த்தை:

‘Not a Fan’ என்ற நூலில் அதன் ஆசிரியர் கைல் ஐடில்மேன் குறிப்பிடுகின்ற செய்தி இது:

புதிதாக உடற்பயிற்சியையோ, அல்லது எந்தவொரு செயலையோ செய்வதாக இருந்தாலும்,

பெரும்பாலானோர் நாளையிலிருந்து தொடங்கலாம் என்றுதான் சொல்வர். ‘நாளை’ வரும்போது, படுக்கையிலிருந்து

அவர்கள் எழுந்திருக்க மனமில்லாமல், ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்பர்.

தூய ஆவியாரையோ அல்லது கடவுளையோ பொறுத்தவரையில், ‘நாளை’ என்ற வார்த்தை அவரது

அகராதிலேயே கிடையவே கிடையாது. ஏனெனில், அவரது அகராதியில் ‘இன்று’ (ஆகா 2:19) என்ற வார்த்தைதான்

உள்ளது.

கைல் ஐடில்மேன் சொல்லக்கூடிய வார்த்ததைகள் முற்றிலும் உண்மை. ஏனெனில், கடவுள், “இன்று முதல்

உங்களுக்கு நான் ஆசி வழங்குவேன்” என்றுதான் சொல்கின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசு மத்தேயுவை

அழைத்ததும் அவர் நாளை வருகிறேன் என்று சொல்லாமல், உடனே அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றார்.

மத்தேயுவின் அழைப்பு நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

வரிதண்டுபவர்கள் பிறப்பால் யூதர்களாக இருந்தாலும், அவர்கள் தங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த

உரோமையர்களிடம் பணிபுரிந்தார்கள் என்பதாலும், நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட, மிகுதியாகப் பணம்

வசூலித்தார்கள் என்பதாலும் (லூக் 19:8) யூதர்களால் அவர்கள் பாவிகள் என்றும் நாட்டைக் காட்டிக் கொடுத்த

துரோகிகள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

Comments are closed.