உலக அமைதிக்காக உடன்பிறந்த உறவில் ஒன்றித்து இறைவேண்டல் செய்வோம்!

பல ஆண்களும் பெண்களும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தின் கைதிகளாக இருக்கும் இவ்வேளையில், திருஅவை எப்போதும், எல்லா இடங்களிலும் மற்றும் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவை ‘நமது நம்பிக்கை’ என்று அறிவிக்கும் பணியைக் கொண்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 28, இவ்வெள்ளியன்று, நாளை கொண்டாடவிருக்கும் புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவை முன்னிட்டு, கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் தலைமை இல்ல பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இணைந்து சான்று பகரவேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்கு வலியுறுத்தினார்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில், திருத்தந்தை ஆறாம் பவுல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தந்தை அத்தேனாகோரஸ் இருவருக்கும் இடையேயான சந்திப்பின் வழியாக  இந்த நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான பயணம் புதிய உத்வேகத்தைப் பெற்றது என்பதையும் தனது உரையில் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.

Comments are closed.