நம் அனைவருக்குமான தந்தையாக இருக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

செனகல் மற்றும் காம்பியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் குழுவையும், புதிய புகலிடத்தை தேடும் பாதையில் புலம்பெயர்த்தோரின் துயரங்களை நூல்ளில் பதிவுசெய்துள்ள அவற்றின் இரண்டு இளைய ஆசிரியர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தாக செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.

ஜூலை 2, இச்செவ்வாயன்று, தனது சாந்தா மார்த்தா இல்லத்தில் இவர்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சந்திப்பை வழக்கம்போல அருளின் தருணமாக உணர்ந்ததாகவும் உரைக்கின்றது அச்செய்திக் குறிப்பு

இந்தப் புலம்பெயர்ந்தோர் குழுவைத் தலைமையேற்று திருத்தந்தையிடம் அழைத்துச்சென்ற அருள்பணியாளர் Dona Mattia Ferrari அவர்கள், இந்தச் சந்திப்புக் குறித்துக் கூறியபோது, ஒரு சிறந்த ஆயராகவும், தந்தையாகவும் தான் திருத்தந்தையை கண்டதாகக் கூறியுள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்புலம்பெயர்ந்தோரின் வலிநிறைந்த கதைகளைக் கேட்க விரும்புவதாககவும், அவர்கள் செய்யும் செயல்களுக்கும் வாழும் முறைகளுக்கும் தான், நன்றி தெரிவிப்பதாகவும், இந்தவழியில் அவர்கள் தொடர்ந்து பயணிக்க அவர்களைத் தான் ஊக்குவிக்க விரும்புவதாகவும் கூறியதாக

Comments are closed.