இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 25:4-ல்,

“ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.” கூறப்பட்டுள்ளது.

ஆண்டவரின் பாதையிலிருந்து நாம் என்றும் விலகாதிருக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

ஆண்டவரின் முதன்மையான கட்டளையை நாம் செவ்வனே கடைபிடிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை.” என இயேசு கூறுகிறார்.

நம் ஆண்டவரின் இரண்டாவது கட்டளையை நாம் அனுதினமும் கடைபிடித்திட வேண்டி

இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

தனது திருப்பலி பிரசங்கத்தின் நடுவில் எண்ணற்ற புதுமைகளைப் புரிந்த ஆயரான இன்றைய புனிதர் நோர்பர்ட், கர்ப்பிணி பெண்களுடைய பாதுகாப்பான பிரசவத்தின் பாதுகாவலராவார்.

பிரசவத்தை எதிர் நோக்கியிருக்கும் எண்ணற்ற பெண்களின் சுக பிரசவத்திற்காக இப்புனிதர் வழியாக வேண்டுவோம்.

கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்திற்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காகவும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.