ஸ்லோவாக்கிய அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஸ்லோவாக்கியா நாட்டின் அரசுத்தலைவர் Zuzana Čaputová அவர்கள், ஜூன் மாதம் முதல் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

இரு தலைவர்களுக்குமிடையே உரையாடலும் பரிசுப்பொருட்கள் பரிமாற்றமும் இடம்பெற்றபின் திருப்பீட உயர் அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார் ஸ்லோவாக்கிய அரசுத் தலைவர்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், நாடுகளுடன் ஆன உறவுகளுக்கான துறையின் நேரடிச் செயலர், பேரருள்திரு  Miroslaw Wachowski ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு, மற்றும் ஸ்லோவாக்கியாவில் தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் குறித்தும் விவாதிக்கப்பட்டது

ஸ்லோவாக்கிய அரசுத் தலைவர் Zuzana Čaputová அவர்கள், அந்நாட்டின் ஐந்தாவது அரசுத்தலைவராகவும், முதல் பெண் அரசுத் தலைவராகவும், 50 வயதேயான இளம் அரசுத் தலைவராகவும் 2019ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார்.

இதற்கிடையே, இதே ஜூன் முதல்தேதி சனிக்கிழமையன்று இந்தியாவின் அஜ்மீர் மறைமாவட்ட ஆயர் பயஸ் தாமஸ் டி சூசா அவர்களின் விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.