இதயங்களை நம்பிக்கையை நோக்கி வழிநடத்தும் அன்னை மரியா

அன்னை மரியாவின் தாய்மை என்பது இறைத்தந்தையின் மென்மையை நாம் எதிர்கொள்வதற்கான மிகச்சரியான, நேரான, எளிமையான பாதை என்றும், அன்னை மரியா தொடக்கத்திலிருந்து நம் இதயங்களை நம்பிக்கையை நோக்கி வழிநடத்துகின்றார் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 8 திங்கள்கிழமை கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு பெருவிழாவை திருஅவை சிறப்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஹேஸ்டாக் கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.      

அன்னை மரியா அவரது பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவரையும் அன்பான கடவுளின் பிள்ளைகளாகவும் அவரது அன்பின் இல்லங்களாகவும் மாற்றுகின்றார் என்றும், நமது இதயங்களை நம்பிக்கையில் வழிநடத்துகின்றார் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

அன்னை மரியின் தாய்மை என்பது இறைத்தந்தையின் மென்மையை நாம் எதிர்கொள்வதற்கான மிகச்சரியான, நேரடியான, எளிதான வழி. அன்னை மரியா தொடக்கத்திலிருந்தே நம்மை வழிநடத்துகின்றார், நமது இதயங்களை நம்பிக்கையின் வழியில் கொண்டு செல்கின்றார், இறைத்தந்தையின் அன்புப் பிள்ளைகளாகவும் அவரின் அன்பு இல்லங்களாகவும் மாறும் மிகப்பெரிய அளவற்ற கொடையாக நம்மை மாற்றுகின்றார் என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

Comments are closed.