பிப்ரவரி 17 : நற்செய்தி வாசகம்

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32

அக்காலத்தில்

இயேசு சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிதண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா!” என்றார். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து அளித்தார். வரிதண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள். பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், “வரிதண்டுபவர்க ளோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————————————

விட்டுவிடுங்கள்; பற்றிக் கொள்ளுங்கள்

திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும் சனிக்கிழமை

I எசாயா 58: 9b-14

திருப்பாடல் 86: 1-2, 3-4, 5-6 (11a)

II மாற்கு 5: 27-32

விட்டுவிடுங்கள்; பற்றிக் கொள்ளுங்கள்

ஆண்டவரைப் பற்றிக்கொள்வோம்

திருமுழுக்குச் சடங்கின்போது அருள்பணியாளர், இறைமக்களைப் பார்த்து, “பாவத்திற்குக் காரணனும் தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?” என்று கேட்டுவிட்டு, “விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல கடவுளை நம்புகிறீர்களா?” என்று கேட்பார். நாம் ஒவ்வொருவரும் அலகையையும், அது தரும் கவர்ச்சிகளையும் விட்டுவிட்டு, ஆண்டவரைப் பற்றிப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதே இந்த வழிபாட்டில் அடங்கியிருக்கும் அர்த்தமாகும்.

இன்றைய இறைவார்த்தையும் நாம் அலகையையும் அதன் செயல்பாடுகளையும் விட்டுவிட்டு, ஆண்டவரைப் பற்றிக்கொண்டு வாழவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், சுட்டிக்காட்டிக் குற்றம் சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும் விட்டுவிட்டு, வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், மண்ணுலகின் உயர்விடங்களில் வலம் வரலாம் என்ற செய்தியைத் தருகின்றது. இஸ்ரேயல் மக்கள் போலியாகக் கடவுளை வழிபட்டார்கள். அதனாலேயே அவர்களுக்கு இத்தகைதோர் அழைப்பு தரப்பட்டது.

இந்த அழைப்பிற்கேற்ற இன்றைய நற்செய்தியில் மத்தேயு, ஆண்டவர் தன்னை அழைத்ததும், அனைத்தையும் விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர்கின்றார். அவருக்குத் தன்னுடைய வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு செய்து, தன்னுடைய நண்பர்களையும் அவருக்கு அறிமுகப்படுத்துகின்றார். இவ்வாறு அவர் தான் மட்டுமல்லாமல், தன் நண்பர்களையும் இயேசுவைப் பற்றிக்கொண்டு வாழ அழைக்கின்றார்.

மத்தேயுவைப் போன்று நாம் ஆண்டவரைப் பற்றிக்கொண்டு வாழ ஆண்டவரின் வழிகாட்டுதல் நமக்கு இருக்க வேண்டும். அதைத்தான் இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப் பாடலான திருப்பாடல் 86 இல் தாவீது, “ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும்” என்கிறார். எனவே, நாம் ஆண்டவரின் வழிகாட்டுதலின் படி, தீமையை விட்டுவிட்டு, நன்மையின் ஊற்றான ஆண்டவரைப் பற்றிக் கொண்டு வாழ்ந்து, அவர் வழி நடப்போம்.

குடியை விட்டுவிட்டுப் புனிதரானவர்

குடிகாரர் ஒருவர் இருந்தார். இவருக்கு வார இறுதியில் குடிக்காவிட்டால் ஏதோ போன்று இருக்கும். ஒருவாரம் இவர் வேலைக்குப் போகாததால், குடிப்பதற்குக் கையில் பணமில்லை. ‘என்ன செய்வது?’ என்று யோசித்த இவருக்கு, ‘எதற்கும் கோயிலுக்குப் போய்வரலாம்’ என்ற எண்ணமானது ஏற்பட்டது. அங்கே சென்று இவர் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது, ‘குடியை அடியோடு விட்டுவிடலாம்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே இவர் அங்கிருந்த அருள்பணியாளரைச் சந்தித்து, தன்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டு, குடியை அடியோடு விட்டுவிடுவதாகச் சபதம் ஏற்றார். அருள்பணியாளரும் இவர் எடுத்த முடிவை நினைத்துப் பெரிதும் மகிழ்ந்தார்.

Comments are closed.