இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

03.12.2023

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

அதித கன மழையினால் அவதியுரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

வாழ்வில் நாம் எல்லாவிதத்திலும் விழிப்பாயிருக்கவும், ஆண்டவரோடு நாம் எந்நாளும் மனம் ஒத்திருந்து மன்றாடவும் இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

நமது உள்ளத்திலும், இல்லத்திலும் பிறக்க இருக்கும் இயேசு பாலனை வரவேற்க, வரக்கூடிய இந்த திருவருகைக் காலத்தில் நம்மையே நாம் முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

தனது 7-வது வயதில் மரித்து பின் இறுதி சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தனது சகோதரியின் செபத்தினால் அதிசயத்தக்க வகையில் உயிர் பெற்று எழுந்தவரும், இன்றைய புனிதருமான அருளாளர் மரியா ஏஞ்சலா தனது துறவற மடத்தை தனது அறிவாலும், சிறந்த ஞானத்தினாலும் சிறப்பாக வழி நடத்தியவராவார்.

துறவற மடங்களை வழி நடத்தும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு நம் இறைவன் நல்ல ஞானத்தையும், இரக்கத்தையும் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நம்மை காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.