பூமியின் அழுகையில் கவனம் செலுத்துவோம்

பூமியின் அழுகையில் நாம் கவனம் செலுத்தவேண்டும்,  ஏழைகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவேண்டும் என்றும், வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்போம்! எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்போம் என்றும் இரண்டு குறுஞ்செய்திகளைத் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர்  2 சனிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இடம்பெறும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் COP28 கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்திகளின் வரிகளை முன்னிலைப்படுத்தி இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளா திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோரின் நம்பிக்கைகள் மற்றும் சிறாரின் கனவுகளை உணர்வுப்பூர்வமாக ஏற்று, அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்போம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களின் எதிர்காலம் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் ஒரு பெரிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், முன்னெப்போதையும் விட இப்போது, நாம் தேர்ந்தெடுக்கும் நிகழ்காலத்தைப் பொறுத்தே நம் அனைவரின் எதிர்காலமும் உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

நுரையீரல் பாதிப்பு மற்றும் காய்ச்சல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இடம்பெறும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் COP28 கூட்டத்தில் பங்கேற்க முடியாது ஓய்வில் இருந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது சார்பாக திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களை தனது செய்தியுடன் அக்கூட்டத்தில் பங்கேற்க அனுப்பி வைத்துள்ளார்.

Comments are closed.