இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நம்மைத் தூய ஆவியின் துணைகொண்டு வழி நடத்திய நம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி எடுக்கப்பட்ட எரேமியா 31:10-ல்,

“ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்.” என வாசித்தோம்.

ஆண்டவர் நமக்கு அரணாக உள்ளார் என்பதை நமது துன்ப வேளைகளில் விசுவசிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

குருவும், சிறந்த மறையியல் வல்லுநரும், இன்றைய புனிதருமான புனித ஜெரோம் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் விவிலிய அறிஞர்களின் பாதுகாவலராவார்.

இறையியல் பயிலும் அனைத்து மாணவர்களுக்காகவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,

நாளை ஞாயிற்றுக் கிழமை முழுத் திருப்பலியில் நாம் ஆண்டவரின் திருவுடலை பெற தகுதிபெறும் பொருட்டு நம்மையே நாம் முழுமையாகத் தாயாரித்துக் கொள்ள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.