உணவு இழப்பு மற்றும் வீணடித்தல் என்பது சமூகத்தின் அவலம் மற்றும் ஏழைகளை அவமானபடுத்துதலின் வெளிப்பாடு

உணவு இழப்பு மற்றும் வீணடித்தல் என்பது சமூகத்தின் அவலம் மற்றும் ஏழைகளை அவமானபடுத்துதலின் வெளிப்பாடு என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 29 அன்று சிறப்பிக்கப்பட்ட உணவு இழப்பு மற்றும் வீணடித்தலுக்கான பன்னாட்டு விழிப்புணர்வு தினத்தை குறிக்கும் வகையில், ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்புக்கு (FAO)  அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு விவரித்துள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ்

மற்றவர்கள் இகழ்ந்து எறியும் குப்பையில் உணவைத் தேடுபவர்கள்  உலகின் ஏழைகள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லெண்ணம் கொண்ட ஆண்களும் பெண்களும் உணவை வீணாக்குவதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இளைஞர்களின் அழுகைக்கு செவிசாய்ப்பது அவசியம் என்றும், உணவு இழப்பு மற்றும் வீணடித்தல் மக்களுக்கும், இவ்வுலகிற்கும் ஏற்படுத்தும் தீய விளைவுகளை நாம் அழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

உணவு இழப்பு, வீணடித்தல் மற்றும் பசியின் பொதுவான வேர்

பசியின் துயரம் மனிதகுலத்தை மிகக் கொடூரமாகத் துன்புறுத்துவது போலவே உணவு இழப்பு மற்றும் வீணடித்தல் கவலையும், தீங்கும் விளைவிப்பதாக கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், இந்த இரண்டு துயரங்களும் மேலாதிக்க கலாச்சாரம் என்கின்ற ஒரு பொதுவான வேரால் ஒன்றுபட்டுள்ளன என்றும், உணவின் மதிப்பினை சிதைத்து அதை வெறும் பொருளாகக் குறைக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனித சுயநலத்தில் வேரூன்றிய இந்த மனப்பான்மை ஒருபுறம் பொறுப்பற்ற முறையில் அடிப்படைப் பொருட்களை அப்புறப்படுத்த பலரை வழிநடத்துகிறது என்றும், மறுபுறம், அதைக் கண்டு கோபப்படாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

தீவிர மாற்றம் தேவை

பொருளாதாரம் அல்லது திருப்தியற்ற இலாபம் ஆகியவற்றின் யதார்த்தத்திற்குள் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது என தீவிர முன்னுதாரண மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை அவர்கள் உணவிற்கு ஆன்மிக அடித்தளம் உள்ளது என்றும் அதன் சரியான நிர்வாகம் நெறிமுறை நடத்தையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திள்ளார்.

உணவு என்பது வாழ்வதற்கான அடிப்படை உரிமையை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது எனவே, ஒவ்வொரு நபரின் அடிப்படை புனிதத்தன்மையிலிருந்து பெறப்பட்டதும், மற்றும் பல மரபுகள், கலாச்சாரங்கள், மதங்களால் அங்கீகரிக்கப்பட்டதுமான அதன் புனிதத்தன்மைக்கு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், வாழ்க்கைக்கு உறுதி அளிக்கும் உணவினை ஒருபோதும் பிரச்சனையாகக் கருதக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

வீணடிக்கும் உணவு – உழைப்பாளர்களின் அவமதிப்பு 

அனைவருக்கும் போதிய அளவு உணவளிக்க இயலாமைக்குக் உலக மக்கள் தொகைப் பெருக்கத்தையே காரணம் காட்டுவது தவறு என்று கூறி  பசியின்மைப் பெருக்கத்திற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் பூமியின் பொருட்களை மறுபகிர்வு செய்வதற்கான உறுதியான அரசியல் விருப்பம் வழியாக இயற்கை நமக்குக் கொடுப்பதில் இருந்து அனைவரும் பயனடையலாம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உணவை வீணடிப்பது என்பது தரமான உணவை மேசைக்குக் கொண்டு வருவதில் உள்ள விவசாயிகளின் தியாகம், உழைப்பு, போக்குவரத்து, ஆற்றல் மற்றும் செலவுகளை மதிப்பிடாமல், உணவு வழங்குபவர்களை இகழ்வது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

உணவு இழப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிகளாக, நிதி ஆதாரங்களை முதலீடு செய்வது, விருப்பங்களை ஒன்றிணைப்பது, வெறும் அறிவிப்புகளிலிருந்து தொலைநோக்கு மற்றும் தீவிரமான முடிவெடுப்பதற்கு நகர்வதாகும் என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், நாம் குப்பையில் வீசுகின்ற உணவை, அதை இழந்தவர்களின் கைகளில் இருந்து அநியாயமாகப் பறிக்கிறோம், என்றும், சிலரின் மிகுதியானது மற்றவர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்ய வேண்டும்” என்றும் விளக்கியுள்ளார்.

பகிர்ந்து வாழ்தல் சகோதரத்துவத்தின் அடிப்படை

இறுதியாக, ஒரே உலகளாவிய மனிதக் குடும்பத்தைச் சேர்ந்த நமது பொதுவான விழிப்புணர்வை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெறும் வயிற்றில் உறங்கச் செல்லும் நம் சகோதரனுக்கு நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்வது கட்டாயமான நீதியாகும் என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments are closed.