கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக வாழ வேண்டும்

மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளப்பட்ட நமது ஒருங்கிணைந்த பயணத்தில் நாம் அனைவரும் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 28 வியாழன் ஹஸ்டாக் படைப்பின் காலம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் வாழும் இந்த பூமி, நம் அனைவருக்கும் பொதுவான இல்லம் என்ற நோக்கத்துடன் இணைந்து செயல்பட வலியுறுத்தியுள்ளார்.

அனைவருடனும் பகிரப்பட்ட நமது ஒருங்கிணைந்த பயணத்தில், நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, நமது வாழ்விலும், பணியிலும், செபத்திலும் இருக்க வேண்டும் என்றும், நாம் வாழுகின்ற இப்பூமி நம் அனைவருக்குமான பொதுவான இல்லம் என்ற எண்ணம் நமது வாழ்வில் நிறைந்திருக்க வேண்டும் என்றும் திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துகின்றது.

Comments are closed.