நல்லிணக்கத்தை உலகிற்கு அளிக்க உதவும் சமயங்கள்

பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆற்றிய உரை

அன்பு சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்!

கிறிஸ்துவை விசுவசிப்போருக்குள் ஓர் விசுவசிக்கும் சகோதரனாகவும், சமய தாகத்தை பகிர்ந்து கொள்வோர் மற்றும் மனித குடும்பத்தின் அங்கத்தினர்களில் உங்கள் அனைவருக்கும் சகோதரனாகவும் உங்களோடு உரையாட என்னை அனுமதிக்க வேண்டுகிறேன். பயணி ஒருவர் தொலைவில் இருந்தே மங்கோலியாவை உற்று நோக்கினார். அவர் வானத்தையும் பூமியையும் மட்டுமே கண்டார் எனும் ரூபாரூக்கின் வில்லியம் கூற்றிற்கேற்ப இங்கே உண்மையாகவே வானம் தெளிவாக நீல நிறத்தில் பரந்த நிலங்களை சூழ்ந்து அரவணைக்கின்றது. இது மனித வாழ்வின் இரண்டு அத்தியாவசிய அம்சங்களை நினைவுபடுத்துகின்றது. ஒன்று மற்றவர்களுடைய உறவுகளால் ஆன பூமிக்குரியது. மற்றொன்று விண்ணுக்குரியது. பயணிகள் மற்றும் வழிப்போக்கர்களாகிய நாம், பூமியில் நமது பயணத்தில் எந்த பாதையை பின்பற்ற வேண்டும் என உய்த்துணர, நமது பார்வையை மேல் நோக்கி வைக்க வேண்டும் என்பதனை மங்கோலியா நம் அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றது. 

நான் இந்த குறிப்பிடத்தக்க சந்திப்பின் தருணத்தில் உங்களோடு இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். உங்கள் ஒவ்வொருவருடைய வருகை மற்றும் உரைகளுக்காகவும் எனது இதயப்பூர்வமான நன்றியை செலுத்துகின்றேன். உங்கள் உரைகள் நமது பொதுவான சிந்தனையை வளப்படுத்தின. நாம் அனைவரும் ஓர் இடத்தில் சந்திக்கின்றோம் ஒன்றிணைகின்றோம் என்பதே இவ்வுலகிற்கு நாம் அனுப்பும் செய்தியாகும். தங்களின் தனித்துவம் மற்றும் பன்முகத்தன்மையால் ஒட்டுமொத்த சமூகத்தின் நன்மைக்காக ஈர்க்கக்கூடிய ஆற்றலை சமய பாரம்பரியங்கள் கொண்டிருக்கின்றன. நாடுகளின் தலைவர்கள், மற்றவர்களுடன் சந்திப்பு மற்றும் உரையாடலின் பாதையைத் தேர்ந்துகொள்வது மக்களை துன்புறுத்துகின்ற தொடர் மோதல்களை நிறுத்துவதற்கு தீர்க்கமான பங்களிப்பாக அமையும்.

அன்பான மங்கோலிய மக்கள், நாம் அனைவரும் நமது பரஸ்பர வளப்படுத்தலுக்காக இணைந்து வருவதை சாத்தியப்படுத்தியிருக்கின்றார்கள். ஏனென்றால் பல்வேறு சமய பாரம்பரியங்களைக் கொண்டவர்கள் இணைந்து வாழ்ந்த வரலாற்றை கொண்டிருக்கின்றனர் மங்கோலிய மக்கள். பண்டைய வரலாற்று சிறப்புமிக்க பேரரசின் தலைநகரான கராகோர் பல்வேறு நம்பிக்கைகளுக்கு சொந்தமான வழிபாட்டு தளங்களை தனது எல்லைக்குள் கொண்டு பாராட்டத்தக்க நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நல்லிணக்கம் என்பது அழகானது

நல்லிணக்கம் என்பது ஒரு பொதுவான, அமைதியான வாழ்க்கையின் பார்வையில், திணிக்கப்படாமல் அல்லது ஒன்றிணைக்காமல், ஆனால் அவற்றின் வேறுபாடுகளுக்கு முழுமையான மரியாதையுடன், மாறுபட்ட உண்மைகளின் ஆக்கப்பூர்வமான இடையீட்டால் பிறந்த சிறப்பு உறவாகும்.

மற்றவர் எல்லோரையும் விட, விசுவாசிகளைவிட, யார் இந்த நல்லிணக்கப் பணிக்கு அழைக்கப்படுகிறார்கள்?

Comments are closed.