இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது: “உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே. எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.” எனக் கூறியதை நாம் வாசித்தோம்.
ஆபிரகாமைப் போல இறைவனுக்கு நாம் பணிந்து அவர் வழி நடந்து நிறைந்த ஆசீர்வாதங்களைப் பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி திருப்பாடல் 105:4-ல், “ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!” என கூறப்பட்டுள்ளது.
ஆண்டவரின் திருமுகத்தை நாம் அனுதினமும் நாட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.” என்பதை வாசித்தோம்.
இறை வார்த்தையை நாம் இடைவிடாது பின்பற்றுவதே நித்திய வாழ்விற்கான சிறந்த வழி என்பதை நாம் உணர வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இவ்வளவு காலமும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசுத் தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.