இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இந்த திருவருகைக் காலத்தில் நாம் ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து விழித்திருந்து மன்றாட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
திருப்பாடல் (25:6)-ல்,
“ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.” என கூறப்பட்டுள்ளது.
இந்த திருவருகைக் காலத்தில் நமது பாவங்களுக்கு மனம் வருந்தி இறைவனின் இரக்கப்பெருக்கத்தை நாடி நல்லதொரு ஒப்புரவு அருட்சாதனத்தை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இந்த திருவருகைக் காலத்தில் நமது உணவு, உடைகளை இல்லாதவரோடு நாம் பகிர்ந்து கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
மக்களிடையே அச்சத்தை உண்டாக்கும் பரவி வரும் ஓமைக்ரான் வைரஸினால் மக்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழி நடத்திட தேவையான ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.