இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில், “தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்” என புனித பவுலடியார் கூறுகிறார்.
பொறாமையற்ற தூய உள்ளத்தில் மட்டுமே தூய அன்பு பிறக்கும். நாம் தூய உள்ளத்தோடு இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
எல்லாத் தருணங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லோரையும் கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாக எல்லா விடயங்களிலும் நம்பிக்கைக்கு உரியவர்களாகத் திகழ்ந்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில்,
“நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.” என இயேசு கூறுகிறார்.
செல்வத்தின் பின்னே ஓடுவது இறைவனை மறப்பதற்கு சமம் என்பதை உணர்ந்தவர்களாக கடவுளுக்கு மட்டும் பணிவிடை செய்ய வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
நமது வேண்டுதல்களுக்கு செவிமடுத்து நல்ல பருவமழையைத் தந்து கொண்டிருக்கும் நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
சென்ற வாரம் முழுவதும் நம்மை காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.