இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
நாம் விசுவாசத்தில் நிலைத்திருந்து ஆண்டவரின் அர்ப்பணிப்பு மிக்க ஊழியர்களாகத் திகழ்வோம்.
செபமாலை மாதமான இம்மாதத்தின் 19-ஆம் நாளான இன்று, நம் ஆண்டவரை ஒவ்வொரு நபரிடமும் நாம் கண்டுகொள்ளவும், யாருக்கு நமது உதவி அதிகம் தேவையோ அவர்களை கண்டுணரவும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
“தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்.” என நமதாண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறியதை நாம் வாசித்தோம்.
ஆண்டவரின் வருகைக்காக நாம் எப்பொழுதும் விழிப்புடன் தயாராக இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
திருஅவையின் 16-வது மாமன்றமானது தூய ஆவியின் வழி நடத்துதலில் சிறப்புடன் நடக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இயேசுவின் திருப்பாடுகளின் சபையின் நிறுவனரும், இன்றைய புனிதருமான புனித சிலுவையின் பவுலைப் போல, நாமும் இயேசுவின் திருப்பாடுகளின் மூலம் கடவுளைக் காண வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.