இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி “கடவுள் நம்மோடு இருக்கின்றார்.” (செக்.8:23) என வாசிக்கின்றோம்.
கடவுள் நம்மோடு எந்நாளும் இருக்கிறார் என நாம் முழுமையாக விசுவசிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில், “யோவானும் யாக்கோபும், “வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?” என்று சொன்னபோது, இயேசு அவர்களைக் கடிந்துகொண்டதன் மூலம் இயேசு, வெறுப்பு ஒருபோதும் தீர்வாகாது அன்பு ஒன்றுதான் தீர்வாக இருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றார்.
வாழ்வில் பல சிக்கல்களுக்கு தூய அன்பு ஒன்றே நிரந்தர தீர்வாகும் என்பதை உணர்ந்து செயல்பட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் மறைசாட்சியும், இன்றைய புனிதருமான லொரென்ஸோ ரூபீஸை நம் திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்த ஆண்டு விவசாயிகளுக்குத் தேவையான நல்ல பருவமழை பொழிந்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.