இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்று தூய கன்னி மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாம், மனிதகுல மீட்பிற்காக இறைவன் அன்னை மரியாளை நமக்கு அளித்ததற்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
ஆரோக்கிய அன்னையின் விழாவைக் கொண்டாடும் நாம், உலக மாந்தர் அனைவருக்கும் அன்னையவள் நல் ஆரோக்கியத்தை இறைவனிடம் பெற்றுத்தர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
தாழ்ச்சி, பொறுமை, இறை சித்தத்தை ஏற்றுக் கொள்ளல் ஆகிய நற்பண்புகளை அன்னையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
நம் அன்னைக்கு, ஆண்டவர் அளித்த உன்னத மகிமையை நமது பிரிவினை சகோதரர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
அன்னையை மகிமைப்படுத்த, மகிழ்ச்சியுறச் செய்ய, குடும்ப செபமாலையை இல்லங்களில் அன்றாட வழக்கமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.