இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர்.” என வாசித்தோம்.
அன்று இஸ்ரயேல் மக்கள் வேற்றுத் தெய்வங்களைத் தொழுது ஆண்டவரின் சினத்திற்கு ஆளாயினர். இன்று ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் பார்த்தல், செல்வத்தின் மீது அதிக பற்று மற்றும் தனி மனித துதிபாடுதல் ஆகிய செயல்களும் ஆண்டவருக்கு சினத்தை உண்டாக்குபவை என்ற உண்மையை உணர இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் விண்ணகத்தில் செல்வராக இருப்பதற்கு மண்ணகத்தில் அதற்குத் தக்கவகையில் நம்மைநாமே நம்மைத் தயாரிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறியதைப் போல தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தவரும், இன்றைய புனிதருமான புனித ஆரோக்கியநாதரிடமிருந்து (புனித ரோச்) ‘பகிர்ந்தளித்தல்’ என்ற பண்பினைக் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழி நடத்திட தேவையான ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
—————————————————-
Following are the Rosary intentions to be recited in the family prayer by all the families today.
16.08.2021 (Monday)
THE JOYFUL MYSTERIES
First Joyful Mystery
The Annunciation of the Angel to Mother Mary.
In today’s first reading we read, “The sons of Israel did what displeases the Lord and served the Baals”.
In those days, the Israelites worshipped the other Gods and that made God’s anger flamed out against them. The Lord will be in anger, if we are much interested in astrology and horoscope. Let us recite this decade to realise this truth.
Second Joyful Mystery
The visitation of Mother Mary to St.Elizabeth
In today’s Gospel our Lord says, “if you wish to be perfect, go and sell what you own and give the money to the poor, and you will have treasure in heaven”.
For us to have the treasure in heaven, let us prepare ourselves here on earth. For this intention let us recite this decade.
Third Joyful Mystery
The nativity of Jesus in Bethlehem.
Today’s Saint St. Roch was a man who sold all his possessions and shared with the poor as Jesus said in today’s Gospel. Let us learn from this Saint the good virtue of sharing with the poor and for this intention let us recite this decade.
Fourth Joyful Mystery.
The Presentation of our Lord.
As we are in the beginning of the week, let our words and deeds be wise throughout this week. Let us ask our Holy Spirit to guide us always and for this intention let us recite this decade.
Fifth Joyful Mystery.
Finding Jesus in the Temple.
Let us pray for all the souls who are forgotten by their family members for years in purgatory and these souls are longing for our prayers. May our Risen Lord grant them eternal rest and enter the heavenly kingdom very soon. For this intention let us recite this decade.
Amen
May be an image of 1 person
Sham Mass, Selvi R Sebastian and 96 others
16 Comments
14 Shares
Like

Comment
Share

Comments are closed.