ஆண்டவருடைய தோற்றமாற்றம்

வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, ஆண்டவருடைய தோற்றமாற்றம் விழாவை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.

“கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் கிடைக்கும் அனுபவத்தை அடைய நாம் அழைக்கப்படுகிறோம் என்பதை, ஆண்டவருடைய தோற்றமாற்றம் விழா நமக்கு நினைவுபடுத்துகின்றது. அதன் வழியாக, நாம் அவரது ஒளியால் ஒளியூட்டப்பட்டு, சிறிதளவு அன்பு மற்றும், நம்பிக்கையைத் தாங்கும், நற்செய்தியின் சிறிய விளக்குகள் போன்று, நாமும் எல்லா இடங்களுக்கும் அவ்வொளியைத் தாங்கிச்செல்வோம், மற்றும், அதனை ஒளிரச்செய்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

புனித பூமியில், தபோர் மலையில் அமைந்துள்ள மூன்று பெருங்கோவில்கள் அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்விலிருந்து, ஆண்டவருடைய தோற்றமாற்றம் விழா கொண்டாடப்படும் வழக்கம் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

9ம் நூற்றாண்டில், இவ்விழா பல்வேறு வடிவங்களில் சிறப்பிக்கப்பட்டு வந்தது. ஆயினும்,1456ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி, பெல்கிரேடு போரில், கிறிஸ்தவர்கள், துருக்கியரைத் தோற்கடித்ததன் நினைவாக, திருத்தந்தை 3ம் கலிஸ்துஸ் அவர்கள், மேற்கத்திய திருஅவையில், இவ்விழா, உலகம் முழுவதும் ஆகஸ்ட் 6ம் தேதி சிறப்பிக்கப்படுமாறு பணித்தார்

Comments are closed.