இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்று நாம் திருச்சபையின் இருபெரும் தூண்களான தூய பேதுரு மற்றும் தூய பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இன்று திருச்சபை உலக முழுவதும் ஆலமரம் போன்று விரிந்திருக்கக் காரணமான, அதற்கு அடித்தளமிட்ட இந்த இரண்டு திருத்தூதர்களையும் நமது திருச்சபைக்குத் தந்தருளிய இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
தூய பேதுரு, தூய பவுல் இருவரிடமும் அவர்களது வலுவின்மையில் தனது வல்லமையை விளங்கச் செய்த இறைவன் நமது வலுவின்மையிலும் அவரது வல்லமை விளங்கச் செய்ய வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
திருமுழுக்குப் பெற்று, நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கும் நாமும், தூய பேதுரு, தூய பவுல் போல இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்த ஜூன் மாதம் முழுவதும் நம் குடும்பத்தையும், நமது தேசத்தையும் இயேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து செபித்தோம். இம்மாதம் முழுவதும் நம்மைக் காத்து வழிநடத்திய இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.