இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில்,
“உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் பகைவரிடமும் அன்பு செலுத்த தேவையான மனப்பக்குவத்தை இறைவன் தந்தருள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.” என இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
மனிதர் அனைவர் மீதும் நிபந்தனையற்ற தூய அன்பு செலுத்துவதன் மூலம் நாமும் விண்ணகத் தந்தை போல் நிறையுள்ளவர்களாக இருக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இயேசுவின் மீதும் , அன்னை மரியாவின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு தனது துன்பங்களை பொறுமையோடு ஏற்றுக் கொண்ட இன்றைய புனிதர் ஜெர்மைன் கஸினிடமிருந்து தாழ்ச்சியை நாம் கற்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்த ஜூன் மாதம் முழுவதும் நம் குடும்பத்தையும், நமது தேசத்தையும் இயேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து செபிப்போம். இம்மாதம் முழுவதும் நம் இறைவன் நம்மைக் காத்து வழிநடத்திட இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.