இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி இரண்டாம் வாசகத்தில், “இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.” என புனித பவுலடியார் கூறுகிறார்.
இவ்வுலகில் நாம் வாழும் காலத்தில் பாவங்கள் செய்யாது இறைவனோடு ஒன்றித்திருக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில், “அது விதைக்கப்பட்ட பின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என இறையாட்சியைப் பற்றி நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
வானத்துப் பறவைகள் தங்கக் கூடிய பெரும் கிளைகளைக் கொண்ட பெரிய மரத்தைப் போல ஆன்மாக்கள் அனைவரும் இளைப்பாற இறையாட்சி என்ற பெரிய மரத்தை விதைத்து வளரச் செய்த இறைவனுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
முன்பு ஞாயிறு திருப்பலிகளில் வாய்ப்பு இருந்தும் இயேசுவின் திருவுடலை நாம் வாங்காத தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
ஊரடங்கு உத்தரவுகள் மேலும் தளர்த்தப்பட்டு ஆலயங்கள் திறக்கப்பட்டு பொது நிலையினருக்காக திருப்பலிகள் நிறைவேற்றப்பட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் நோய்த்தொற்று கொண்டவர்களை சுத்திகரித்து, அவர்களுக்கு பரிபூரண சுகம் அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.