ஆனையூர் வரலாற்று சிப்பி ஆங்கில ரீச்சர் பொன்மலர் கிறிஸ்ரோலோகஸ்

ஆங்கிலம் கற்பதுதான் கடினம் அப்பொழுது
அதை கற்பிப்பது மிகக் கடினம் இப்போது புரிகிறது கண்ணாடி ஆங்கில ரீச்சர் பொன்மலர் கிறிஸ்ரோலோகஸ் அம்மா
ஆனையூர் பாடசாலையில் அரை நூற்றாண்டு ஆங்கிலம் கற்பித்தவர்
இல்லை ஆனையூருக்கே ஆங்கிலம் கற்பித்தவர்!!
ஆனையூர் ஆங்கில நடன
இசைகளின் பிதாமகள்!!
மெலிந்த உருவம் வட்ட கண்ணாடியும்
இவர் முகவரி!!
பட்டறிவும் ஆங்கில மொழியும் கொண்ட போராட்டம்
தொகுத்தறிவினால் தூரநோக்குக்
கொண்டு ஆனையூரை உயர்த்தும் போராட்டம்!!
சேவை என எண்ணி இவர் ஆங்கிலத்தை புகட்டியதால்
சேர்த்து வைத்த ஆங்கிலத்தை
பட்டம் பெற்று பதவியில் பறக்கிறார்
எம் மாந்தர் இன்று!!
ஓய்வுவரை எம் ஊருக்கே
உழைத்த உத்தமி
இவர் போல் யார் உண்டு இன்று
எம் மண்ணில் சொல்!!
கண்டிப்பானவர், கதைகளும்
சொல்வார்
பெண் பாதுகாப்பு பெரிதும்
மதிக்கும் பாரதியவர்!!
உண்னைக் கண்டால் எனக்கு பயம்
வெள்ளை காறன் மொழி விசமானதால்!!
ஊரில் அரச வேலைபெற ஆங்கில படிவம் நிரப்பி ஊக்கம் கொடுப்பார்
அன்பு காட்டி புத்திமதி சொல்லும்
புத்திரி!!
பாவம் பாலாய் போன ஆங்கிலம்
மண்டையில் கசந்ததால்
வெறுப்போரும் சிலர் உண்டு!!
உலகில் அகதியான எமக்கு ஆரம்பம்
ஆங்கிலம் தான் தஞ்சமானது
போற்றுகிறோம் உம் பணி தாயே!!
நீ முதுகில் சிலுவை சுமந்து
எம் மார்பில் பதக்கம் அணிவித்து
அழகு பார்த்த தேவதை!!
நீ ஓங்கி அடித்த பிரம்பு
நேராக என் மண்டையில் இறங்கியது
ஆங்கில அறிவு!!
நிலவின் ஒளிபார்த்து
இருளில் நின்ற சூரியன்
கறைபடிந்த கையுடன்
கரும்பலகையில்
நீ அன்று
மகுடம் கொண்ட கையுடம் மணக்கிறோம் நாம் இன்று!!
வாழ்த்துகள் சொர்க்கத்திலும் நீ ஆங்கில சூரியன் தான் பொன்மலர் அம்மா !!
தமிழ் புரவலன் ஆனையூர்

Comments are closed.