வாழும்போதே வாழ்த்துவோம் இயேசுதாசன் ஜயா

காற்று உம்மால் மணம் வீசுகிறது
காயப்பூக்கள் பூப்பிக்கிக்கின்றது
வெறுமை நிரப்புகிறது
மாயைக்குள் மெய்யாகிறது உம் இசை
இயேசுதாசன் ஜயா

ஆடைக்கல அன்னைக்கு நிஜம் சொன்னாய்
நித்தமாய் இசையாள் குளிர்வித்தாய்
பக்தியை உம் பாச விரல்களால்
மீட்டி பல ஆண்டுகள்
பாடல்குழாம் நடத்தினாய்

நாள் பூசை தவறாத நாயகன்
எம் ஊருக்கு உம் இசையாளும்
முகவரி முளைத்தது
திருமறை கலாமன்றம் உம்மை தத்தெடுத்து தீட்டுப்படா உம் இசையாள்
தெரு கூடி தேரில் ஏற்றி இழுத்தது

மிருகங்களுக்குக் கனவு தருகிறாய்
தாவரங்களின் தலை கோதுகிறாய்
மேகங்கள் சாமரை வீசுகிறாய்
பிறையை வளர்ப்பிக்கிறாய்
விண்மீன்கள் தூங்கவைக்கிறாய்

எங்கள்
ஆனையூர் இடுக்குகளில்
தேன்கூடு கட்டுகிறது உம் நினைவு

உம் சேவைக்கு எங்கள்
கண்ணிமைகள் தாழ்ந்து
கம்பளம் விரிக்க

கண்ணீர் ஆங்காங்கே
திரவமலர் தெளிக்க

புல்லரிக்கும் உரோமங்கள்
எழுந்து நின்று வரவேற்க

உமை வாழ்த்துகிறேன்
ராஜமரியாதை உம் சேவைக்கு ராஜா
மடுத்தினும்பிள்ளை ஜெசுதாசன்

தமிழ் புரவலன் ஆனையூரான்

Comments are closed.