துன்புறுவோர் இயேசுவின் இதயத்தால் தொடப்படட்டடும்

உலகின் பல பகுதிகளில், கோவிட்-19 கொள்ளைநோய் தொடர்ந்து பரவிவரும்வேளை, அனைத்துவிதமான துன்பங்களாலும் பாதிக்கப்பட்டோரை மறவாது, இறைவேண்டல் செய்யுமாறு, ஒரு காணொளிச் செய்தி வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 4, இவ்வியாழன் மாலையில், ஜூன் மாதச் செபக்கருத்து பற்றி காணொளிச் செய்தியில் விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,. பல்வேறு முறைகளில் துன்புறுவோர் அனைவரும், இயேசுவின் இதயத்தால் தொடப்பட தங்களை அனுமதிக்கும் ஒரு வாழ்வுமுறையைக் கண்டுணரும்படியாக, இறைவனை மன்றாடுவோம் என்று கூறியுள்ளார்.

கவலை, துன்பம், இன்னல் போன்றவை எங்கெல்லாம் நிலவுகின்றதோ, அங்கெல்லாம், எப்போதும் முதலில் பிரசன்னமாக இருப்பது இயேசுவின் இதயம் என்றும், இந்த உலகில் எவருமே தன்னந்தனியாக இல்லை என்றும், நம் அனைவருக்கும் தேவையான மற்றும், உதவுகின்ற ஒரு பாதை உள்ளது என்றும், அந்தப் பாதை, இயேசுவின் இதயத்தோடு நம்மை இணைக்கின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த உலகில், மக்கள், கருணை என்ற பணியை ஆற்ற, இயேசுவின் இதயம் அவர்களை வழிநடத்திச் செல்கின்றது என்றும், இயேசுவின் இதயம் காட்டும் இந்தப் பாதையில் நாம் செல்வதற்கு முயற்சிக்கவேண்டும், ஏனெனில், கனிவு என்ற புரட்சிப்பாதையில் நம்மை ஈடுபடுத்த அந்த இதயம் தயாராக இருக்கின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்

துன்புறுவோர் அனைவரும், தங்களுக்குரிய வாழ்வின் வழியைக் கண்டுணரவும், இயேசுவின் இதயத்தால் தொடப்பட, தங்களையே அனுமதிக்கவும் ஜூன் மாதத்தில் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.