பிறருக்குத் தொண்டாற்ற தங்களையே வழங்கும் உண்மையான ஹீரோக்களாக வாழ இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அன்புக்கு ஆகட்டும் – உலக இளைஞர் நாள்

இக்குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக இளைஞர் நாள் பற்றியும், மறையுரையின் இறுதியில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 35 ஆண்டுகளாக இந்நாளைச் சிறப்பித்து வருகிறோம், பிறருக்குத் தொண்டாற்ற தங்களையே வழங்கும் உண்மையான ஹீரோக்களாக வாழ இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இளைஞர்களே, உங்கள் வாழ்வை கடவுளுக்கும், மற்றவர்க்கும் அர்ப்பணிக்க அஞ்ச வேண்டாம், நம் வாழ்வை பிறருக்கு அளிக்கும்போது மட்டுமே, அதை ஒரு கொடையாகப் பெற முடியும், ஆனால், அப்படியிருந்தால் என்று சொல்லாமல், அன்புக்கு ஆகட்டும் என்று சொல்கையிலிருந்தே, நமக்கு உள்ளார்ந்த மகிழ்வு கிடைக்கும், இயேசுவும் இவ்வாறே செய்தார் என்று மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த புனித வாரத்தில், வத்திக்கான் புனித

Comments are closed.