கோவிட்-19 நெருக்கடியில் பரிபூரண பலன்

துன்புறும் மற்றும், மரணத்தை எதிர்கொள்ளும் மக்கள் கடவுளின் பராமரிப்பை ஒருபோதும் தவறவிடாமல் இருக்கவும், அவர்களுக்கு திருஅவை ஆறுதலாகவும், நெருக்கமாகவும் இருக்கின்றது என்பதை உணர வைக்கவும், அவசர காலங்களில், அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும், கர்தினால் Piacenza அவர்கள் கூறினார்.

பரிபூரண பலன்களைப் பெறும்முறை

கோவிட்-19 நோயாளிகளும், அவர்களைப் பாரமரிப்பவர்களும், ஆன்மீக முறையில் ஒன்றித்திருந்து, இயலக்கூடிய வகையில், ஊடகம் வழியாக, திருப்பலி அல்லது செபமாலை பக்தி முயற்சி அல்லது சிலுவைப்பாதை அல்லது மற்ற பக்தி முயற்சிகளில் பங்குகொள்ள அழைக்கப்படுகின்றனர். இது இயலாதபட்சத்தில், அவர்கள் விசுவாச அறிக்கை, இயேசு கற்றுக்கொடுத்த செபம் மற்றும், அன்னை மரியாவை நோக்கிச் செபம் சொல்ல வேண்டும். மேலும், இந்நோயால் இறந்தவர்கள், துன்புறுவோர், மற்றும், இந்த கொள்ளை நோய் முடிவுற செபிப்பவர்கள், இயலக்கூடிய இடத்தில் திருநற்கருணை சந்திப்பு அல்லது, திருநற்கருணை ஆராதனையில் பங்கு கொள்ள வேண்டும். அல்லது, விவிலியத்தை குறைந்தது அரைமணி நேரம் வாசிக்க வேண்டும் அல்லது செபமாலை,  சிலுவைப்பாதை ஆகியவற்றை செபிக்க வேண்டும், இவற்றை வீட்டில் இருந்துகொண்டே செய்யலாம் என்று கர்தினால் கூறியுள்ளார்.

இவர்கள் எல்லாருமே தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு செபத்தை தவறாமல் செபித்திருக்க வேண்டும்.

Comments are closed.