பிரிவினைவாதிகள் கத்தோலிக்க விசுவாச நம்பிக்கைகள் குறித்து தப்பறையாக போதிக்கும் நிகழ்வு

பிரிவினைவாதிகள் கத்தோலிக்க விசுவாச நம்பிக்கைகள் குறித்து தப்பறையாக போதிக்கும் நிகழ்வு இறைமகன் இயேசுவின் தாய் அன்னைமரியா இறந்தவர் என்றும் இறந்த புனிதர்கள் உங்களுக்காக எப்படி மன்றாட முடியும் உயிரோடு இருக்கும் தேவபிள்ளைகள்தான் மற்றவருக்கும் மன்றாட முடியும் என்ற கிறிஸ்தவ கோட்பாட்டிற்கு எதிரான கருத்துகளை முற்வைக்கிறார்கள்

பிரிவினைவாதிகள் மேற்கோள் காட்டும் கருத்துகள்👇👇👇

1 கொரிந்தியர் – 1 கொரி 15 23 ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.

1 தெசலோனிக்கர் – 1 தெச 4 16 கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்.

நாம் இவற்றை மறுக்கவில்லை

ஆனால் ஆண்டவர் இயேசு சொன்ன வார்த்தைகள் இதோ 👇👇👇

யோவான் – யோவா 11 26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.

ஆன்மா அழிவதில்லை 👇👇👇👇👇

2 கொரிந்தியர் – 2 கொரி 5 8 நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.

2 கொரிந்தியர் – 2 கொரி 5 9 எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம்.

37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, “ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள்” என்று கூறியிருக்கிறார்.

லூக்கா நற்செய்தி 20:37
38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, #வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் #உயிருள்ளவர்களே” என்றார்.
லூக்கா நற்செய்தி 20:38

1 நீதி மான்களின் ஆன்மாக்கள் #கடவுளின் #கையில் உள்ளன. #கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது.

சாலமோனின் ஞானம் 3:1
#அறிவிலிகளின் கண்களில் #இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது.

சாலமோனின் ஞானம் 3:2
4 மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், #இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
சாலமோனின் ஞானம் 3:4

💥பழைய ஏற்பாட்டில் புனிதர்கள் செய்த அற்புதங்கள் 👇👇👇

2 அரசர்கள் – 2 அர 13 21 மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்; எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான்.

💥இறந்த புனிதர் எலிசாவின் எலும்புகள் வழியாக இறைவன் ஒருவருக்கு உயிர்தருகிறார் 💥

2 மக்கபேயர் – 2 மக் 15 12 அவர் கண்ட காட்சி பின்வருமாறு: ஓனியா தம் கைகளை விரித்து யூத மக்கள் அனைவருக்காகவும் மன்றாடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு காலத்தில் தலைமைக் குருவாய் இருந்தவர், நல்லவர், மேன்மைமிக்கவர், எளிமையான தோற்றமும் அடக்கமுடைமையும் உள்ளவர், பொருந்தப் பேசுபவர், குழந்தைப் பருவ முதல் நற்பண்புகளில் பயிற்சி பெற்றவர்.

💥இறந்த ஓனியா என்ற புனிதர் இறந்த பிறகு யூத மக்களுக்காக மன்றாடியதாக விவிலியத்தில் உள்ளது 💥

சீராக் – சீஞா 46 20 அவர் (யாக்கோபு )துயில்) கொண்டபின்னும் (இறந்த பிறகும்)இறைவாக்கு உரைத்தார்; மன்னருக்கு அவருடைய முடிவை வெளிப்படுத்தினார்; மக்களுடைய தீநெறியைத் துடைத்துவிட இறைவாக்காக மண்ணிலிருந்து தம் குரலை எழுப்பினார்.

தோபித்து – தோபி 12 12 நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்; இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன்.

தோபித்து – தோபி 12 14 அதேபோல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார்.

இவ்வாறு புனிதர்களும் நமது வேண்டுதல்களை அவர்கள் செபங்களோடு சேர்த்து இறைவனிடம் கொண்டு சேர்க்கிறார்கள்

👇புதிய ஏற்பாடு நிகழ்வுகள் 💥

💥💥💥💥💥

மத்தேயு – மத் 17 3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

💥இந்த வசனத்தை படியுங்கள் 💥

பிரிவினைவாதிகள் கூற்றுபடி இறந்த மோசை எப்படி ஆண்டவர் இயேசுவோடு பேச முடியும்

மரித்த ஒருவர் ஆண்டவரோடு பேசுவதுபோல் உள்ள காட்சியை ஏன் அப்போஸ்தலர்களுக்கு விசுவாசத்திற்காக காட்சிபடுத்தவேண்டும்

எலியா எனோக்கு இரண்டுபேர் மட்டும்தானே இறக்காமல் விண்ணகம் சென்றதாக உள்ளது

இறந்த ஒருவரையும் இறக்காமல் விண்ணகம் சென்ற ஒருவரையும் ஏன் ஒரே காட்சியில் காட்சிபடுத்த வேண்டும் ????

தேவராஜ் யத்தில் இறந்த மோசைக்கு இடம் உண்டா ?

இதோ லூக்கா எழுதியது 💥

லூக்கா – லூக் 9 30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.

லூக்கா – லூக் 9 31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாட்சியுடன் தோன்றிய அவர்கள் என்றால் என்ன ????

இறந்த மோசைக்கு எப்படி மாட்சி கிடைத்தது
💥💥💥💥💥
மத்தேயு – மத் 27 52 கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.

மத்தேயு – மத் 27 53 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.
உயிரோடு உடலோடு எழுப்பபட்ட 💥இறைமக்கள் 💥 என்பவர்கள் யார் ???? உலகத்தில் இறந்த அனைவரும் இறைமக்களா ???

👆👆👆👆👆👆👆

உயிருடன் எழுப்பபட்ட இறைமக்கள் இப்போது எங்கு இருப்பார்கள் ????

2 கொரிந்தியர் – 2 கொரி 12 2 கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யானறியேன். கடவுளே அதை அறிவார்.

2 கொரிந்தியர் – 2 கொரி 12 3 ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்;

2 கொரிந்தியர் – 2 கொரி 12 4 அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான்.

👆👆👆👆👆👆

விண்ணகத்திற்கு எடுத்துகொள்ளபட்ட அந்த கிறிஸ்தவ அடியானை போன்ற புனிதர்கள் விண்ணகத்திற்கு சென்றிருக்கமாட்டார்களா ?????

ஒவ்வோர் இறைமக்களின் விண்ணேற்றத்தையும் விவிலியத்தில் எழுத முடியுமா ?????

திருவெளிப்பாடு – திவெ 7 13 மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார்.

திருவெளிப்பாடு – திவெ 7 14 நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.

திருவெளிப்பாடு – திவெ 7 15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.

இதில் மூப்பர்கள் என்பவர்கள் புனிதர்கள்

👇👇👇👇👇👇👇
இதோ

திருவெளிப்பாடு – திவெ 5 8 அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டிமுன் வீழ்ந்தார்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற் கிண்ணங்களும் வைத்திருந்தார்கள். 💥💥இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள். 💥

திருவெளிப்பாடு – திவெ 8 3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது 💥இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது. 💥

இது விண்ணக நிகழ்வு 💥

💥நமது வேண்டுதல்களை விண்ணகத்திற்கு தங்கள் செபங்களோடு கொண்டு இறைவனிடம் சமர்ப்பிக்கிறார்கள் 💥

ஆண்டவர் இயேசுவின் இறைபணிக்காக உயிர்துறந்த 💥இரத்த சாட்சிகள் மறைசாட்சிகள்💥 கிறிஸ்தவ வாழ்வின் முன்னோடிகள் 💥அனைவரும் மற்ற மனிதர்களும் ஒன்றா ????

திருவெளிப்பாடு – திவெ 11 19 அப்பொழுது விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் நிலநடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின.

திருவெளிப்பாடு – திவெ 12 1 5. அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும்
பெண்ணும் அரக்கப் பாம்பும்

வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.

விண்ணகதந்தையால்
முன்குறித்து இறை திட்டத்தில் சுதனாகிய இறைவனின் தாயாக

புதிய உடன்படிக்கை பேழையாக வந்தவர் அன்னைமரியாழ்

💥💥💥💥💥💥💥

திருப்பாடல்கள் – திபா 132 6 திருப்பேழை எப்ராத்தாவில் ( பெத்லகேம் )இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.

திருப்பாடல்கள் – திபா 132 7 “அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.

👆👇👆👇👆👇👆

மத்தேயு : 2 : 1 – ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

மத்தேயு : 2 : 11 – அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

அன்னையின் விண்ணேற்பு குறித்து சொல்லபட்டதீர்க்கதரிசனம்
💥💥💥💥💥💥💥

திருப்பாடல்கள் – திபா 132 8 ஆண்டவரே! நீர் உமது வல்லமை
விளங்கும் பேழையுடன் (அன்னையுடன்)உமது (
விண்ணகத்திற்கு)உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக!

💥விண்ணகத்தில் இருக்கும் அன்னைமரியா தன் மக்களுக்காக மன்றாடமாட்டாரா ??💥

💥எரேமியா – எரே 1 5 “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.” 💥

💥ஆண்டவர் யாரை தன் மீட்பு திட்டத்தில் தேர்ந்தெடுத்தாரோ அவர்களை உலகம் முடியும்வரை பங்குபெறசெய்வார்💥

💥ஆண்டவர் இயேசுவின் மீட்புபணிக்காக தனது சொத்துகளை எல்லாம் விற்று ஏழைகளுக்கு தந்து இரத்தம் சிந்தி மறை சாட்சிகளாக பிறருக்கு எடுத்துகாட்டாக வாழ்கிறார்கள் 💥

💥ஊழியுள்ள காலம் முழுவதும் புனித மக்களின் வருகை தொடரும்💥

Comments are closed.