ஆற்றல் மிக்கது செபம்

நமது வாழ்க்கையை உந்திச்செல்ல வைக்கும் ஆற்றல் கொண்டது செபம் என்றும், நமது ஆற்றல் கொண்டு நாம் வெகுதொலைவிற்குச் சென்றுவிட முடியாது என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 1 திங்கள் கிழமை ஹேஸ்டாக் செப ஆண்டு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் எல்லாவிதமான ஆற்றல்களையும் பெற்றவர்கள் இல்லை என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

செபம் என்பது நமது வாழ்க்கைக்கு மிக முக்கியமானது, நமது வாழ்க்கையை உந்திச்செல்ல வைக்கும் ஆற்றல் பெற்றது. நமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து நம்மை தூரமாக வைத்திருக்க உதவுகின்றது. நமது சொந்த ஆற்றல் கொண்டு நம்மால் தொலைதூரத்திற்கு செல்ல முடியாது. நாம் தான் என்று நினைத்தோமானால் நாம் விரைவில் தோல்வியடைவோம் என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.    

Comments are closed.