இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இந்திய நாட்டின் திருத்தூதர் என அழைக்கப்படும் தூய தோமாவின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில், இறைவனிடத்திலும், நம்மோடு வாழும் சக மனிதர்களிடத்திலும் நம்பிக்கை கொண்டு வாழ்கிறோமா? என நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

“நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்”. (யோவான் 11:16). என்று அச்சமின்றி கூறிய தோமாவிடமிருந்து துணிவினை நாம் கற்றுக் கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இந்தியாவில் திருச்சபை காலூன்றக் காரணமான புனித தோமாவைத் தேர்ந்தெடுத்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

உத்திரப் பிரதேசத்தில் ஹாத்ரஸ் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை இன்று நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.