இயேசு கிறிஸ்துவின் காலத்தில் கப்பர்நகூம் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் கப்பர்நகூம் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர் , தொல்பொருள் சான்றுகளின் அடிப்படையில் இது இயேசுவின் அப்போஸ்தலரான புனித பேதுருவின் வீடு எனக்கண்டுபிடித்தனர் .

மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

மாற்கு 2:4-5

மேற்படி புதுமையை இயேசு இவ்விடத்தில்தான் செய்தார்.

1968 மற்றும் 1998 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இடத்தில் தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்போது இவ்விடம் ஒரு தேவாலயமாகவும் புனித யாத்திரைக்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் . மேலும், இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் கல்வெட்டுகள் காணடுபிடிக்கப்பட்டன. தளத்தின் நினைவாக கட்டப்பட்ட புனித பேதுருவின் பெரிய தேவாலயத்தின் கீழ் இன்று இந்த அமைப்பு காணப்படுகிறது.

Comments are closed.