இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட தானியேல் நூலில், ஆண்டவர் தம் தூதரை அனுப்பி, தம்முடைய ஊழியர்களை மீட்டதை காண்கிறோம்.

எத்தகைய சூழ்நிலையிலும் விசுவாசத்தில் தளராத தன் பிள்ளைகளை ஆண்டவர் ஒரு போதும் கைவிடமாட்டார் என்ற உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வசனம் எடுக்கப்பட்ட லூக்கா நற்செய்தியில்,

“சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.” என கூறப்பட்டுள்ளது.

இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடந்து நாம் பேறுபெற்றவர்களாக திகழ வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இந்த நாள் முழுவதும் நம்முடைய பேச்சிலும், செய்கின்ற செயல்கள் அனைத்திலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழி நடத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

அனுதினமும் எண்ணற்ற நோயாளிகளின் நோயைக் குணமாக்கிய இன்றைய புனிதர் புனித சல்வடோரைத் திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இந்த தவக்காலத்தில் நாம் செய்யும் பக்தி முயற்சிகள் அனைத்தும், இறைவனுடைய இரக்கப்பெருக்கமும், அவரது அருளும் நமக்குக் கிடைத்திடும் வகையில் அமைந்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.