கிறிஸ்துவின் அழகினால் நம்மை நிரப்ப வேண்டும்
கிறிஸ்துவின் அன்பில்லாத அனைத்தையும் விட்டு விலகி, கிறிஸ்துவின் அழகினால் நம்மை நிரப்ப வேண்டும் என்றும், எந்நிலையிலும் தனி செபத்தைக் கைவிடாது எளிமை என்னும் நற்பண்பு கொண்ட மனநிலையுடன் வாழ வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பதினாறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் உருவான சில துறவற சபைகளைச் சார்ந்த அருள்சகோதரிகளை அவர்களின் பொதுப்பேரவையை முன்னிட்டு ஜூலை 15 திங்கள்கிழமை வத்திக்கானில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துறவற வாழ்க்கையின் அழகு மற்றும் எளிமை என்னும் இரண்டு தலைப்புக்களில் தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுநன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது என்ற திருத்தூதர் பவுலின் இறைவார்த்தைக்கேற்ப, கிறிஸ்துவின் அழகினால் உலகம் முழுவதும் மறைப்பணி ஒளிவீசட்டும் என்றும் கூறினார்.
துறவற ஆண்கள் மற்றும் பெண்களின் ஆன்மிகப் பயணத்தைத் திருஅவைத் தந்தையர்கள் தெய்வீக அழகின் அன்பு, தெய்வீக நன்மையின் கதிர்வீச்சு என்று வரையறுத்திருப்பது தற்செயலானது அல்ல என்றும், திருஅவையின் வாழும்
Comments are closed.