கடவுள் தன்னை நம்பும் தாழ்ச்சியுடையவர்களைத் தேடுகிறார்

கடவுள் தன்னை நம்பும் தாழ்ச்சியுடையவர்களைத் தேடுகிறார், தங்களையும் தங்கள் சொந்த திட்டங்களையும் நம்புபவர்களையல்ல, என இச்செவ்வாயன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் நமக்குத் தேவை என்பதை முழுவதுமாக விசுவசித்து நம் முழு நம்பிக்கையையும் அவரில் வைக்கிறோம் என்பதை மையமாக வைத்து மார்ச் 12, செவ்வாய்க்கிழமையன்று டுவிட்டர் குறுஞ்செய்தியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ மனத்தாழ்ச்சி என்பது, ஏனைய நல்லொழுக்கங்களில் ஒன்று என்னும் சாதாரணமானதல்ல, மாறாக,  இது வாழ்க்கையின் அடிப்படை இயல்பு என அதில் மேலும் கூறியுள்ளார்.

2012ஆம் ஆண்டு துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் ஏறக்குறைய தினமும் செய்திகளை வழங்கி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்வேறு மொழிகளில் டுவிட்டர் செய்திகளை பதிவிட்டுவரும் திருத்தந்தையரின் பக்கத்தில் இதுவரை ஆங்கிலத்தில் 5336 குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

1 கோடியே 86 இலட்சம் பேர் இதுவரை திருத்தந்தையரின் ஆங்கில டுவிட்டர் பக்கத்தை பார்வையிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்

Comments are closed.