இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
இறைவனின் இறைவார்த்தைகளை கடைப்பிடிப்பதில் நாம் என்றும் கருத்தாய் இருந்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய புனிதர்களான கோஸ்மாஸ் மற்றும் தமியான் இரட்டையர்கள் ஏழைகளுக்கு செய்த தொண்டினால் குணமளிக்கும் வல்லமையை இறைவனிடம் இருந்து பெற்றனர். எண்ணற்ற மக்கள் கிறிஸ்தவர்களாக மனம்மாற காரணமாக இருந்த இருவரும் மறைசாட்சிகளாக மரித்தனர். இந்த இரு புனிதர்களின் புனித வாழ்க்கையை நாம் முன்மாதிரியாகக் கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
திருஅவையியில் பல வழிகளில் ஊடுறுவியிருக்கும் அலகை விளைவிக்கும் அனைத்து சோதனைகளில் இருந்தும் திருஅவையை இறைவன் மீட்டிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்த ஆண்டு நமக்கு நல்ல பருவமழை பெய்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.