இறைவனுடன் தொடர்பு கொண்டிருப்போருக்கும் துயர்கள் தொடர்கின்றன
நாம் இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதன் வழியாக, துன்ப துயர்களிலிருந்து வாழ்வு நமக்கு விடுதலை வழங்குவதில்லை என்பதை வியாகுல அன்னை நமக்குக் கற்றுத் தருகிறார் என செப்டம்பர் 15, வெள்ளிக்கிழமையன்று டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருச்சிலுவை மகிமையில் உயர்த்தப்பட்ட விழாவிற்கு மறுநாள், செப்டம்பர் 15 அன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் வியாகுல அன்னையின் திருவிழாவை முன்னிட்டு இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இறைவனிடம் நெருங்கிய உறவு கொண்டிருக்கும்போது, நம் வாழ்வு நம்மை துன்பங்களிலிருந்து விலகியிருக்க விடுவதில்லை, மாறாக, நன்மைத்தனத்தின் தொடுவானத்தை நமக்கு திறந்துவிட்டு, அதன் முழுமை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது என்பதை வியாகுல அன்னை நமக்குக் கற்றுத்தருகிறார் என தன் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
இதே நாளில், அதாவது செப்டம்பர் 15 அன்று அட் லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகருக்கு வந்திருந்த காமரூன் நாட்டு ஆயர்களையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், எழுத்தாளரும், இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவருமான திருமதி Maria Campatelli அவர்களையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.