கிறிஸ்துவில் ஒன்றிணைந்து இருப்போம் – திருத்தந்தை

கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதும் கிறிஸ்துவில் நிலைத்து இருப்போம் என்றும்,  அவருடன் எப்போதும் ஒன்றாக இருக்க முயற்சி செய்வோம் என்றும் தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 11, வெள்ளிக்கிழமை இவ்வாறு தனது கருத்துக்களைத் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் பின்தொடர்வோம் என்றும், அன்பு செய்வதில் அவரது மாதிரிகையைக் கடைபிடிப்போம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்துவில் நிலைத்திருப்போம், அவருடன் எப்போதும் ஒன்றாக இணைந்திருக்க முயற்சி செய்வோம். அவரைப் பின்பற்றுவோம், அவரது அன்பை மாதிரிகையாகக் கொள்வோம். அவருடைய அன்பின் இயக்கத்தினால், மற்றவர்களைச் சந்திக்கச் செல்வோம், நற்செய்தி அறிவிப்பிற்கான புதிய பாதைகளைக் கண்டுபிடிக்கும் துணிவுடன் பணிசெய்யப் புறப்படுவோம் என்பதே அக்குறுஞ்செய்தி உணர்த்துவதாகும்.

Comments are closed.